Breaking News LIVE:ஆளுநரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது - திருமாவளவன் எம்.பி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
SLET தேர்வு இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மருவத்தூர் கோவிலின் அமைந்துள்ள பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
ஜமீன் பல்லாவரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 1.16 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வரலாறு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், நல்லதைக் கூட ஜாக்கிரதையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராசர் கோவிலில் அறநிலையத்துறை தலையிட்டால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Background
Bakrid 2023: உலகம் முழுவதும் இன்று அதாவது ஜூன் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்க்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இத்-உஸ்-ஜுஹாவை முன்னிட்டு, அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இந்தப் பண்டிகை, தியாகம் மற்றும் மனிதகுலத்திற்கான தன்னலமற்ற சேவையின் பாதையில் செல்ல நம்மைத் தூண்டுகிறது. இந்த நாளில், சமூகத்தில் பரஸ்பர சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பரப்புவதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்குறிப்பில், “ "நாம் அனைவரும் விரும்பும் அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகைக் கட்டியெழுப்ப இன்றியமையாத தியாகம், கருணை மற்றும் சகோதரத்துவம்" ஆகியவற்றின் மதிப்புகளை இந்த விழா நமக்கு நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி தனது வாழ்த்துக்குறிப்பில், "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள். பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மை உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்பமாக அமைதியான, ஆத்மநிர்பர்பாரத் & இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம்" என தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ”சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.
ஏழை எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்: பிறகு நண்பர்கள்: அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும் நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
- - - - - - - - - Advertisement - - - - - - - - -