Breaking News LIVE: 8 வழி சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என, பாமக எம்.பி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்.
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் அமளியால் மாநிலங்களவை,மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 12 பேருக்கு இன்ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 12 பேருக்கு இன்ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
வட இந்தியர்கள் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை என சீமான் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள் தான் தமிழர்களை தாக்குவதாக சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
வட இந்தியர்கள் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை என சீமான் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள் தான் தமிழர்களை தாக்குவதாக சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
திருச்சியில் காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை இன்று துவங்கியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்திருந்த இடம்பெற்ற முதுமலை தம்பதிகள் பொம்மன், பெள்ளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டின் மீது திமுக அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் உருட்டுக் கட்டைகளுடன் வந்து கார், பைக் உள்ளிட்ட வற்றை தாக்கியுள்ளனர்.
எதிர் கட்சிகள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதால் பாராளுமன்ற வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லாலி பிரசாத் அமைச்சராக இருந்த போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் லலு பிரசாத் யாதவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
298வது நாள்:
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.
இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -