Breaking LIVE: கன்னியாகுமரியில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரையை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15 ம் தேதி மதுரையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சேலம் : தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 75,000 பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சி
சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பிரச்னைக்கு பிறகு நாளை முதன் முறையாக அதிமுக அலுவலகம் செல்கிறார் எடப்பாடி..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.244 குறைந்து ரூ.37,560 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,695 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,776 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,097 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு ஒரு காசு குறைந்து ரூ. 59 ஆக விற்பனையாகிறது.
ராகுல் காந்தி கூட்டத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு .
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள, செல்வம் என்பவரின் மகன் குணசேகரன். இவர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி வரவேற்பில் கலந்து கொண்டார். அப்பொழுது திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
துபாயில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
தென் மாவட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : இன்று கன்னியாகுமரி செல்கிறார்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணம் : ராகுல் காந்தி சென்னை வந்தார் - முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி இன்று தொடங்கி வைக்கிறார்.
இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.
Background
சென்னையில் 109வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 109வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 7) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -