Breaking LIVE: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்..

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவாக காணலாம்.

ABP NADU Last Updated: 29 Sep 2022 12:58 PM
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

செப்.30 முதல் அக்.3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் 

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : திக்விஜய் சிங் பேட்டி 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக திக்விஜய் சிங் பேட்டி.


ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அசோக் கெலாட் மறுத்துள்ள நிலையில் திக்விஜய் சிங் பேட்டி.

உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

மனிதகழிவுகளை அப்புறப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் - நீதிமன்றம்

Highcourt Chief Justice Muralidhar : சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிறார் முரளிதர். ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் முரளிதரை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.

இந்தியாவில் புதிதாக 4272 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று

அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை 

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் - உச்சநீதிமன்றம் 

கருக்கலைப்பு : பெண்களுக்கு உரிமை உண்டு 

சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் 

பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை: மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியது ஆர்.எஸ்.எஸ்

பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை: மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியது ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு கெடும் காரணத்தை தெரிவித்து, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி ஊர்வலத்திற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியது  ஆர் எஸ் எஸ் அமைப்பு 

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தள்ள நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியது ஆர் எஸ் எஸ் அமைப்பு 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1500  உயர்ந்து 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து 4,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் : பல மாவட்டங்களில் அனுமதி  மறுப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்து சுற்றறிக்கை. நிபந்தனைகளுடன் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ட்விட்டர் பக்கம் முடக்கம்..!

இணையதளத்தை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை.. அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சட்டத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை விதித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். 

சிதம்பரம் அருகே இந்து பிரமுகர் ஜீப் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..!

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் உள்ள சீனு என்கிற ராமதாஸ் வீட்டின் மீது அதிகாலையில் இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்டதாக புகார் அளித்துள்ளார். 

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்..!

இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்..!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானில் புரட்சிப் படை தாக்குதல் - 13 பேர் பலி

ஈரான் குர்கிஸ்தான் பகுதியில் புரட்சிப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Background

சென்னையில் 131ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 131ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.