Breaking LIVE : லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கைது

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவாக காணலாம்.

ABP NADU Last Updated: 27 Sep 2022 09:24 PM
லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகை ஆஷாபரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் : மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

ஏற்பாடு  சரியில்லை நிகழ்ச்சியிலிருந்து  வெளியேறிய மா.சு 

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சு

ஏற்பாடு  சரியில்லை நிகழ்ச்சியிலிருந்து  வெளியேறிய மாசு 

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சு

17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் 

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம் 

சென்னை ஆயிரம் விளக்கில் எம்ஜிஆர் சிலை சேதம் 

சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 
எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கு  வெள்ளிக்கிழமை விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான தனிநீதிபதி தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பு 

விசிக மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு 

அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் : நீதிபதி இளந்திரையன் 

அண்ணா சிலை அவமதிப்பு -  ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 

அண்ணா சிலையை சில விஷமிகள் அவமதிப்பு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் - ஓபிஎஸ்

அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி  ராமச்சந்திரன் : ஓபிஎஸ்

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு 

30 ஆம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு  கூட்டம் 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் : பள்ளிக்கல்வித்துறை 

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 550 புள்ளிகள் அதிகரித்து 57, 696 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்ந்து 17,171 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது 

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 4610 க்கும் ஒரு சவரன் ரூ.36880 க்கும் விற்பனை.


சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70க்கு விற்பனையாகிறது.

திருவாரூர், நன்னிலம் தாலுகா - பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!

தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டது. 

புதுச்சேரியில் இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு..!

புதுச்சேரியில் திமுக எம்பி ஆராசாவை கண்டித்து பந்த்- விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்..!

திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம் ; 3 அடுக்கு சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றார்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திக்க இருக்கிறார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இடங்களில் மீண்டும் ரெய்டு..!

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தி கைது நடவடிக்கை எடுத்த நிலையில் மாநில காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


அதன்படி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடைபெறுகிறது. 

அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை..!

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள வீட்டில் தமிழ்நாடு அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மூத்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Background

சென்னையில் 129ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 129வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.









 


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.