Breaking LIVE : ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்.. ஒப்புதல் அளித்த தமிழ்நாடு அமைச்சரவை..!

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 26 Sep 2022 09:16 PM
கோவை குண்டு வீச்சு - ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சதாம் உசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர ஆணையர் விளக்கமளித்தார். 

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்.. ஒப்புதல் அளித்த தமிழ்நாடு அமைச்சரவை..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநடின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

வெளியானது கியூட் தேர்வு முடிவுகள்..!

முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் முதுகலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்செக்ஸ் 954 புள்ளிகள் வீழ்ச்சி

உலகப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லக்கூடும் என்ற அச்சத்தால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவு 


மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 954 புள்ளிகள் சரிந்து 57,145 புள்ளிகளாக வீழ்ச்சி. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 311 புள்ளிகள் சரிந்து 17,016 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு 


 


 

சென்னையில் பரவலாக மழை

மேகமூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்தால் நடவடிக்கை..!

அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம்

குலசேசரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க  வேண்டாம் - முதல்வர்

 நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமள்க்கும் பேச்சுகளைத் தவிர்க்குமாறு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை 

இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு 20  ஆண்டுகள் சிறை தண்டனை  

சிறுமி பாலியல் வழக்கில், காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பா.ஜ.க பிரமுகர் உள்பட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை - போக்சோ சிறப்பு நீதிமன்றம்


 

வண்ணாரப்பேட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு  - 8 பேருக்கு ஆயுள்

சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் 

கொளத்தூரை மட்டும் முதல்வர் காப்பாற்றபார்ப்பதா-  ஜெயக்குமார் கேள்வி 

மழைநீர் வடிகால் பணி முடியாத நிலையில் கொளத்தூர் தொகுதியை மட்டும் முதல்வர் காப்பாற்ற பார்க்கிறார் : ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

தீபாவளி பண்டிகை - பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை.

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி ஆலோசனை

கைதான மூவரும் PFI அமைப்பைச் சேர்ந்தவர்கள்

பொள்ளாச்சியில் கடந்த 20 ஆம் தேதி இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் தாக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது. பொள்ளாச்சி அடுத்துள்ள குமரன் நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் கார்கள் மீது டீசல் நிரப்பப்பட்ட கவர்கள் வீச்சு.

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சு - 3 பேர் கைது 

பொள்ளாச்சியை சேர்ந்த முகமது ரபிக், ரமீஸ் ராஜா, மாலிக் என்கிற சாதிக் பாஷா ஆகிய மூன்று பேர் கைது 

நளினி விடுதலை வழக்கு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். தங்களை விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் மற்றும் நளினி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை


வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

கர்நாடகத்தில் தசரா விழா துவக்கம்

இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, கர்நாடகத்தில் தசரா விழாவை துவங்கி வைத்தார்

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1048 புள்ளிகள் சரிந்து 57,050 புள்ளிகளில் வர்த்தகம் 


தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 345 புள்ளிகள் குறைந்து 16, 982 புள்ளிகளில் வர்த்தகம் 

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு - மேலும் ஒருவர் கைது

மதுரை அனுப்பானடியில் ஆர் எஸ் எஸ் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - மேலும் ஒருவர் கைது 

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு  இடைக்கால ஜாமீன் 

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  ரூ.81.50 ஆக சரிவு 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 41 காசு குறைந்து இதுவரை இல்லாத அளவாக ரூ.81.50 ஆக சரிந்தது 

அதிமுக கலவர வழக்கு - ஆவணங்கள் மீட்பு 

அதிமுக அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு - சிபிசிஐடி போலீசார்.


அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு. 

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்கு

அ.தி.மு.க. கலவர வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 60 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்துள்ளது. 

அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

அக்டோபரில் சட்டபேரவைக் கூட்டம்  நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார் முதல்வர்
ஸ்டாலின். ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்.

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

முதல்வர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. 

Background

சென்னையில் 128ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 128வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.