ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனாமார்க் பகுதியில் இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார்.

ரூ.2,700 கோடி மதிப்பிலான இசட் வடிவ சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனாமார்க் பகுதியில் இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தி உள்ள காகங்கீர், சோனாமார்க்கை இணைக்கும் வகையில் இசட் வடிவ சுரங்கப் பாதை ரூ. 2,700 கோடி மதிப்பில் 6.5 கி.மீ தொலைவிற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Just In




இதை திறந்த வைத்த பின், பிரதமர் மோடி கட்டுமான தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இரு வழிப்பாதையாக தலா 10 மீ அகலம் கொண்ட சிக் சாக் வளைவுகளுடன் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1000 வாகனங்கள் செல்ல முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையின் அருகிலேயே 10 மீ அகலம் கொண்ட மற்றொரு சுரங்கப்பாதையும் உள்ளது. ஸ்ரீநகர் - லே இடையே அனைத்து காலங்களிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும். ஸ்ரீநகர் - சோனாமார்க் இடையே அனைத்து வானிலைகளிலும் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை, ஸ்ரீநகர் மற்றும் லடாக் இடையே ஆண்டு முழுவதும் தடையற்ற இணைப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மேலும், “இது ஸ்ரீநகரிலிருந்து லே வரை உள்ளூர் விவசாயப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்கும், பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், அதே நேரத்தில் விரைவான இணைப்பை வளர்க்கும்” என்றும் அவர் கூறினார்.