Breaking LIVE: மருத்துவ படிப்புக்கு செப்டம்பர் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
கள்ளச்சந்தையில் மது விற்றதாக தகவல் கொடுத்த முன்னாள் வார்டு கவுன்சிலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஐந்து பேர் சைதாபேட்டை நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கு கொடுத்தவர் கருணாநிதி. சட்ட அறிவு, வாத திறனை ஏழைக்களுக்காக பயன்படுத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
காய்ச்சல் தொடர்பாக நாளை தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சினிமா நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்களையும் தடயவியல் துறைக்கு அனுப்பியது கோயம்பேடு போலீஸ். காதலன் எனக் கூறப்படும் சிராஜுதின் படப்பிடிப்பில் உள்ளதால் விசாரணைக்கு நேரம் கேட்டுள்ளதாக போலீசார் தகவல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு பற்றி அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்
விற்பனை பற்றி உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது - ஈபிஎஸ்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்படவும் முதலமைச்சர் வேண்டுகோள். சட்ட விதிகளோடு சமூக நீதியையும் காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
ஆம்னி பேருந்துகளுக்கு வசூலிக்கும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளா.
ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானதால் இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் :
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,120 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,336 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,042 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.62.30 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.62,300 விற்பனையாகிறது.
மெக்ஸிகோவில் 7.6 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: மொகாலியில் இரவு 7.30 மணிக்கு தொடக்கம்
Background
சென்னையில் 122ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 122ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -