Breaking LIVE: கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
கனியாமூர் பள்ளியை மறுசீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். பள்ளி கட்டடங்களை சீரமைப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கட்டடங்களை சீரமைக்க ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமையில் ஈடுபட்ட விவகாரத்தில் பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகேஸ்வரனின் பெட்டிக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் வீடியோ முன்னதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேளச்சேரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
"பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி பெறுகிறேன். பெரியாரின் சிந்தனைகளை மொழிப்பெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கப்புலிகளை வனப்பகுதியில் திறந்துவிட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் பிறந்தநாளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நிலையுடனும் வாழ வேண்டும்” எனக் கூறி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 9ஆவது நாள் பாரத் ஜோடா யாத்ரா நடைபயணத்தைத் தொடங்கினார்.
அதன்படி, கொல்லம் மாவட்டம், புலியக்காவு பகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திரம் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்களின் சார்பாக தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரானதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் அருவிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெள்ளப்பெருக்கால் பழுதாகியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்திக்கு ஆதரவான பேச்சைக் கண்டித்து சென்னையில் வரும் 24ஆம் தேதி வைகோ ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொள்ளுமாறு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஹைதரபாத் விடுதலை நாள் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் புதுச்சேரியில் இன்று முதல் செப்.25ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்பேரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை பரிந்துரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட நினைவு, பரிசுப் பொருள்கள் இன்று முதல் டெல்லியில் ஏலம் விடப்படுகின்றன.
இன்று முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த ஏலத்தை நடத்த மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசம், சியோப்பூர் குனோ தேசிய பூங்காவுக்கு எடுத்துவரப்பட்ட சிறுத்தப் புலிகளை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
8 சிறுத்தைப் புலிகளில் 3 சிறுத்தைப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
Background
பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (செப்.17) மரியாதை செலுத்துகிறார்.
அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர்.
Periyar Quotes: ஈரோடு மாவட்டத்தில், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்த வெ. ராமசாமி எனும் சமூகநீதி நாயகன் தனது சமூக சீர்திருத்த பயணத்தில் கூறிய மிகவும் முக்கியமான பொன் மொழிகளை அவரது 144வது பிறந்த நாளான இன்று காணலாம்.
* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் கொதித்து எழாமல் இருக்க உண்டாக்கப்பட்ட சதியாகும்!
* யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும் உனது புத்தில்லும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!
* கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பறப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை!
* திருமணம் என்பது வயது வந்த, அறிவு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட கரியமே தவிர மற்ற யாருக்கும் வேறு எதற்கும் கட்டுப்பட்டதல்ல!
* எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரை பார்த்ததுகூட இல்லைங்க!
* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு!
* உன் சாஸ்த்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது; அதை சிந்தி!
* பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணையமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்!
* கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!
* விதியை நம்பி மதியை இழக்காதே!
* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ, அதேபோல் தான் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே ஒழுக்கமாகும்!
* பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பதோடு, பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயும் இருக்கிறது!
* முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்!
* ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்வதில்லை, ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தைக் கொல்வதில்லை ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்கிறான் எனவே மனிதன் தான் மிகவும் அபாயகரமானவன்!
* ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாட்டின் மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்!
* தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்!
*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவருடன் போராடுவது கடினமான காரியம்!
* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்!
* எந்த மனிதனும் எனக்கு மேலானவன் இல்லை, அதேபோல் எனக்கு கீழானவனும் இல்லை!
* பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!
* நான்கு ஆண்கள், ஒரு பெண் இருக்கும் குடும்பத்தில், முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்!
* உன்னை யோசிக்க வைப்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல, நீ நீயாகவே இரு!
* மனிதன் பெண்ணை தன்னுடைய சொத்தாக நினைக்கிறனே தவிர, தன்னைப்போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிராக மதிப்பதில்லை!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -