Breaking LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 13 Sep 2022 07:16 PM
32.97 இலட்ச ரூபாய் பணம், 1228 கிராம் தங்கம்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சிக்கிய பொருட்கள்!

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 31 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியதில் 32.97 இலட்ச ரூபாய் பணம், 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி ஆபரணங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 316 ஆவணங்கள், 2 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில்  சோதனை நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை,தேனி, மதுரை, ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த சோதனைகளும் நிறைவு பெற்றதாக தகவல்

நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை : ஈபிஎஸ்

எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி 

மக்களை திசை திருப்ப லஞ்ச ஒழிப்பு சோதனை - ஜெயக்குமார்

மின்கட்டண உயர்வால் உண்டான கோவத்தை திசைதிருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது - ஜெயக்குமார் 

வேலுமணி இல்லத்திற்கு ஜெயக்குமார் வருகை

ரெய்டு நடக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுமதி மறுப்பு 

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்  நீக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த சத்யா நீக்கம்.


சத்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து பதவி இழந்தார்.

தடை செய்தும் ப்ரீ ஃபயர் எப்படி விளையாடுகின்றனர்?

முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில்  ப்ரீ ஃபயர் விளையாட்டை இளம் தலைமுறையினர் விளையாடுவது எப்படி ? - உயர்நீதிமன்ற கிளை 

அனைத்துத்துறை செயலர்களுடன்  முதல்வர் ஆலோசனை

சென்னை தலைவர் செயலகத்தில் அனைத்துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை


துறைவரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

சி.விஜயபாஸ்கர் சென்னை வீட்டில் சோதனை

இன்று காலையில் தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் லண்டனிலிருந்து சென்னை திரும்பி உள்ளார்

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து  ரூ. 62.40 ஆக விற்பனையாகிறது.

தங்க விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து  ரூ.4,725 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன்  41,016 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,127 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் கைது 

கலைந்து செல்ல மறுத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், அருண்குமார் உள்ளிட்ட 6 பேர் கைது

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில்  ரெய்டு 

திருச்சி பெரியார் நகரில் உள்ள சுதாகர் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

Breaking LIVE: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது. 

Breaking LIVE: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு

சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகியவற்றில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking LIVE: நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Breaking LIVE: அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Background

சென்னையில் 115வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 











கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.










- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.