Breaking LIVE: Pro Kabaddi 2022: ட்ராவில் முடிந்த தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் கபடி போட்டி

Breaking LIVE : தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ABP NADU Last Updated: 08 Oct 2022 10:11 PM
Pro Kabaddi 2022: ட்ராவில் முடிந்த தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் கபடி போட்டி

Pro Kabaddi 2022: தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கபடி போட்டி இன்று ட்ராவில் முடிவடைந்தது.



 

சிவசேனா கட்சியின் வில் - அம்பு சின்னம் முடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரிய நிலையில் , சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது

”நவீன ஆயுதங்களை கையாள, விமானப்படையில் புது படைப்பிரிவு”

நவீன ஆயுதங்களை கையாள, விமானப்படையில் புது படைப்பிரிவு உருவாக்கப்படும் என விமானப்படை தளபதி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Rain Alert: இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

90வது ஆண்டு விமானப்படை கொண்டாட்டம்!

டெல்லியில் 90வது விமானப்படை ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத சிங்  தலைமையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் அய்வு!

மழைநீர்  வடிகால் பணிகள் சென்னை முழுவதும் நடந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் எவ்வாறு நடை பெற்று வருகிறது என முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  

தீப்பிடித்து எரிந்த சுற்றுலாப் பேருந்து; 12 பேர் பரிதாபமாக பலி

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக கட்டணம் வசூலிப்பு புகார் : ஆட்டோக்களுக்கு தடை விதித்த கர்நாடக அரசு

அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறும் மெஸ்ஸி..!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு பெற உள்ளதாக தகவல் 

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் 

Background

சென்னையில் 140வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 140வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.08) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.