Rajinikanth: நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று இதயம் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement


ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி:


சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மருத்துர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட்டு தான், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவருக்கு சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் போலி எனவும், ஏற்கனவே உடலில் அவ்வப்போது ஏற்படும் சில அசவுகரியங்களுக்கான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது?


குறிப்பிட்ட சிகிச்சை முறைக்கு பிறகு இன்று காலை, ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளியான,  முதற்கட்ட தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால், அது உண்மை இல்லை எனவும், திட்டமிடப்பட்ட சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்றும் தெரிய வந்திருப்பது ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.  சிகிச்சைக்குப் பிறகு 2-3 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும், சுமார் 2 வார கால ஓய்விற்குப் பிறகு மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 


முதலமைச்சர் ஸ்டாலின் டிவீட்:


இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.






நெருங்கும் வேட்டையன் ரிலீஸ்


தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், த.செ. ஞானவேல் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வரும் 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் காவல்துறையை சேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும், கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்


ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்” என்று கூறியிருக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன், திட்டமிட்ட மருத்துவ சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. அதனால் அச்சப்பட எதுவுமில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


சாதாரண பரிசோதனை , யாரும் கவலைபட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்


நடிகர் ரஜினிகாந்த் சென்னை கிரீம்ஸ்சாலயில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வயிறு கோளாறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அனுமதிக்கப்பட்டுள்ளார்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் , கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்