திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் அரண்மனையானது, மதுரை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இன்றளவும் கம்பீரமாக உள்ளது.
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சம் ஜீவ சுகம் பெற ராகம் நதி நீண்ட வா.......... மதுரை சாலைகள் கழுகு பார்வையில்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ரவுண்டானாவின் இரவு நேர மின்னொளி காட்சி.
நதியே, நதியே காதல் நதியே நீயும் பெண்தானே இங்க நீயும் பெண்தானே.... மதுரை வண்டியூர் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர்...!
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்..... மதுரையின் அழகிய வயல்வெளிகள்.
மதுரை கண்மாயின் அழகு அதிகாலை காட்சி.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள கூடழகர் பெருமாள் கோயில் தெப்பத்தின் காட்சி.
மதுரை வைகையின் ட்ரோன் காட்சி.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மாநகர் மத்தியில் அழகான காட்சி.