Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 01 Oct 2024 09:43 PM
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி

உடல் ஒவ்வாமை காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News LIVE: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் - மாலை 5 மணி வரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

 


ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


மதியம் 5 மணி நிலவரப்படி 65.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பந்துப்பூர் - 63.33%, பாரமுல்லா - 55.73%, ஜம்மு - 66.79%, கதுவா - 70.53%, குப்வாரா - 62.76%, சம்பா - 72.41%, உதம்பூர் - 72.91%

Breaking News LIVE: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரப்படி 44.08% வாக்குப்பதிவு 

 


ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பந்துப்பூர் - 42.67 சதவீதம், பாரமுல்லா - 36.60%, ஜம்மு - 43.36%, கதுவா - 43.36%, கதுவா - 50.09%, குப்வாரா - 42.08%, சம்பா - 49.73%, உதம்பூர் - 51.66% 

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இயல்பு நிலைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

RSS Rally : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம். குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி எனக்கூறி அனுமதி மறுக்கப்படக்கூடாது என அறிவுறுத்தல்

52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தமிழ்நாட்டில் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"தமிழ்நாட்டின் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளார் முதலமைச்சர்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்"- உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

"சூப்பர் ஸ்டார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்"- உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். - அரசு தேர்வுகள் இயக்ககம்

ஜூலை 24ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். - அரசு தேர்வுகள் இயக்ககம்

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 20வது நாளாக வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு,தொழிற்சங்க அங்கிகாரம், எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 20-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சாம்சங் வேலை நிறுத்தம் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி Citu மாநில தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலிசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மாநகரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு.

மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு.


முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக, சிவக்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார். சிவக்குமார் தொழில் செய்வதற்காக வழங்கிய ₹90 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் தங்க நகையை மீட்டுத் தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை.

திருப்பதி கோயிலில் நேற்று ஒரு நாளில் ₹ 5.05 கோடி காணிக்கை!

திருப்பதி கோயிலில் நேற்று ஒரு நாளில் ₹ 5.05 கோடி காணிக்கை!


திருமலை திருப்பதி கோவிலில், நேற்று ஒருநாளில் மட்டும் பக்தர்களிடமிருந்து ரூ.5.05 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து, நூற்று அறுபத்து மூன்று பக்தர்கள் மொட்டையடித்து முடியைக் காணிக்கையாக செலுத்தியிருக்கிறார்கள்

குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர் ரவி.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர் ரவி.

Background


  • இனப் பகைவர்களின் திசைதிருப்பல்களுக்கு இடம் கொடுக்காமல், சமூக ஊடகங்களில் களப்பணியாற்ற வேண்டும் - திமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

  • நடிகர் ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி - உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

  • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்தது ரூ.1,903-க்கு விற்பனை - வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

  • சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு

  • உதகை மற்றும் கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

  • சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரையிலான பயண அட்டவனையில் மாற்றம் - விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி நடவடிக்கை

  • அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் - நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் இருப்பதாகவும் மத்திய அரசு தகவல்

  • திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

  • ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • மணிப்பூர் போன்ற தீவிர பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் - அமித் ஷாவிற்கு கார்கே பதிலடி

  • புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று வேலைநிறுத்தம்

  • நில முறைகேடு விவகாரம் - 14 மனைகளை திருப்பித் தர கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி முடிவு

  • இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி - அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என நம்பிக்கை

  • நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

  • இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி - இந்திய அணி வெற்றி பெற தீவிர முயற்சி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.