Breaking LIVE: 2022 FIFA உலகக்கோப்பைதான் இறுதி.. மெஸ்ஸி அறிவிப்பு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெலராஸை சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞரான அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல், உக்ரைனிய மனித உரிமை அமைப்பான சென்டர் ஃபார் சிவில் லிபர்ட்டிஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு.ரஷிய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு நோபல் பரிசு.
அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிப்பு.
பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை போலீஸ். நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.
தமிழ்நாட்டில் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பூரில் 3 சிறுவர்கள் இறந்த காப்பகம் மூடப்படுகிறது - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்
திமுக-வில் 15 வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. திமுக தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுதாக்கல் செய்துள்ளார்.
விருத்தாசலத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 265 புள்ளிகள் சரிந்து 57,956 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் சரிந்து 17,244 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூரில் மழை பெய்ய வாய்ப்பு.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கல்லூரி சாலையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் விக்னேஷ் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஓமலூரில் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்ரவர்த்தியிடம் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை செய்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் விருப்பமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.38,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூக்கி ஏறிவதற்கான நேரம் இது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தற்போது வரை 22,643 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Background
சென்னையில் 139வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 139வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.07) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -