Breaking LIVE : சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 11 Oct 2022 01:44 PM
சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

அ.தி.மு.க. சார்பில் எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் 


 


 

அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறாரா?

அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்க தமிழக பாஜக சார்பில் அழைப்பு.

தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சந்திரசூட் 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை

சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிவு 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் சரிந்து 57,808 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்ததை குறியீட்டு எண் நிஃப்டி 42 புள்ளிகள் சரிந்து 17, 198 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு இனறு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து 64,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 

கடலூரில் கவிழ்ந்த வேன் - 20 மாணவர்கள் காயம்

கடலூரில் வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். 

திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஆலந்தூரில் நள்ளிரவில் பட்டாகத்தியுடன் அட்டூழியம் செய்த ரவுடிகள்..! 14 பேர் கைது

சென்னை, ஆலந்தூரில் நேற்று நள்ளிரவு பட்டகாத்தியுடன் வன்முறையில் ஈடுபட்ட மர்மகும்பலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Background

சென்னையில் 143வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 143வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.