Breaking LIVE : புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என தகவல்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழகத்தை சேர்ந்தவரை மண முடித்ததால் பிறப்பிட சான்று, இதர சான்றுகளை வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கு. வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் அனுமதிக்க மத்திய மருத்துவசேர்க்கை குழுவுக்கு உத்தரவு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன், மின்துறை ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் போராட்டம் வாபஸ் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்க மைசூரு வந்தார் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.
கன்னியாகுமரி - காஷ்மீர் நோக்கி ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் பங்கேற்க மைசூரு வந்தார் சோனியா காந்தி.
2022-2023ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் கடந்த 2014ல் 14 கிலோ எடையில் தங்கக்கவசம் வழங்கப்பட்டது. மதுரையில் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவரின் தங்கத் கவசத்தை பெற ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் முனைப்பு.
கவசத்தை பெற ஓபிஎஸ் ஆதரவாளரான எம்.பி.தர்மர் உள்ளிட்டோர் வங்கியில் கடிதத்தை வழங்க உள்ளனர். இருதரப்பினரும் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் .
மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாபோ என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த சார்ல்ஸ், பிருத்விராஜ், தாவிதுராஜ் ஆகியோர் சடலமாக மீட்பு.
திருவண்ணாமலை உள்ள அம்மாபாளையத்தில் டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம்
மராட்டியம், பீகார், அரியானா, தெலுங்கானா, உ.பி, ஒடிசாவில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதுதான்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,640 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,856 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,107 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.62.50 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.62,500 ஆக விற்பனையாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 473 புள்ளிகள் சரிந்து 56,953 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் சரிந்து 16,966 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
600 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ 1500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ரூ. 800க்கும், முல்லைப்பூ ரூ.1000க்கும், சம்பங்கி ரூ.300க்கும் விற்பனை.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தபடும் : அமைச்சர் தர்மேந்திர பிரதான்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 38 காசு சரிந்து ரூ.81.78 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. அதன்படி, ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 4*400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றுள்ளது.
நேபாளத்தில் உள்ள மனாஸ்து மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றுக்கு 6,550,573 பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார மையம் தகவல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்
Background
சென்னையில் 135ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 135ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -