Breaking LIVE: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தென்பட்ட சூரிய கிரகணம் நிறைவடைந்தது. பொதுமக்கள் பல இடங்களிலும் தொலைநோக்கி மூலம் இதை கண்டுகளித்தனர்.
உலக அளவில் பகுதியளவு சூரிய கிரகணம் சென்னையில் தென்பட்டது.
அரிய வான் நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு ஜாஷ்மீர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
இன்று நடைபெறும் பகுதி நேர சூரிய கிரணத்தின்போது பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படும். இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலின் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மறுநாள் காலை திற்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CMRL Record: ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் 2,63,610 பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியிருந்த வாட்ஸ் அப் சேவை சீரானது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் அனுப்ப, ரீசிவ் செய்ய முடியாமல் இருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயல்படுகிறது.
மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணன் இறந்ததற்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிதியுதவி என்பது பிரச்சனைக்கு தீர்வு அல்ல; இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளேன். சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ மூடி மறைக்கின்றனர் : அண்ணாமலை
தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் வரும் 29ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் - அமைச்சர்
வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் நாளை அறிக்கை வெளியீடு
கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 36 மணி நேரம் கடந்தும் மக்களை சந்தித்து பேச முதல்வர் தயங்குவது ஏன்? தமிழகம் இதுவரை கண்டிராத நிகழ்வு திமுக ஆட்சியில் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
திருச்சி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதால் இருவழிப்பாதையில் ஒருபாதையில் போக்குவரத்து பாதிப்பு
Corona Virus Update : இந்தியாவில் புதிதாக 862 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால் 284 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது : போலீஸ்
சிட்ரங் புயல் சிட்டகாங் பரிசல் கடற்கரையில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு கரையைக் கடந்தது.
கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தெருக்களில் குவிந்து கிடந்த பட்டாசுக் குப்பைகள் இரவோடு இரவாக துப்பரவு பணியாளர்கள் அகற்றினர்.
சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி இலங்கையுடன் நேருக்கு நேர் மோத இருக்கிறது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 157வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 157வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -