Breaking LIVE : ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு - ரயில்வே பாதுகாப்பு படை
Brekaing LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடி நிரம்பியது.
தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்னசெய்தது என்றுகேட்டால் பதிலில்லை; மேயர்கள் பேசும் தமிழை கொஞ்சம் கேட்டுபாருங்கள்.இந்தியில் மருத்துவபடிப்பை கொடுக்க எதிர்க்கிறார்கள்; ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை.திமுகவினர் நடத்தும் எந்தெந்த பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பதை வரும் 27 ஆம் தேதி செய்வோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகார்த்தில் ஏன் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை கேள்வி.
தமிழ்நாட்டில் தீபாவளியன்று மிதமான மழையே பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் ராதாகிருஷ்ணன் மீது பழிசுமத்துவது தவறு என்று அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
கவர்ப்பேட்டையில் இருசக்கரவாகனத்தில் சாலையில் கத்தியுடன் ரகளையில் ஈடுப்பட்ட 6 கல்லூரி மாணவர்கள் கைது
சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடமும் உறவினிடமும் தெரிவித்துவிட்டு ராயப்பன் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தகவல். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்ற நபரை 48 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், விசாரணை கைதி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை.
விருதுநகர் - தொடர் மழையால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் 25 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 3,102 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்; 24,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியையொட்டி, சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து சராசரியாக ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது
தமிழகத்தில், தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறைவிட கோரிக்கை எழுந்துள்ளதாகத் தகவல்
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாறியது
வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனை தொடர்ந்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் - வானிலை மையம்
வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டி 20 உலகக் கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன
டி 20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 154வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 154வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -