Breaking LIVE : காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்குப்பதிவு தொடக்கம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Oct 2022 08:21 PM
Breaking LIVE : வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது!

வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்ததையெடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு 7000 கன அடி நீர்வரத்து உள்ளது. இதனால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை 

தமிழகத்தில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது; இந்த கொடுமை ஏன்? - ஆளுநர்

சென்செக்ஸ் 374 புள்ளிகள் உயர்வு 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் உயர்ந்து 58,294 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 17,920 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சிவாஜி கணேசனின் மகள்கள் மனு தள்ளுபடி 

சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, ராம்குமாருக்கு எதிராக மகள்கள் சாந்தி, ராஜ்வி வழக்கு.


சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.


 

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை 

அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்குப்பதிவு தொடக்கம்

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது.

தரவரிசை பட்டியல் : மதுரை மாணவர் முதலிடம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மதுரையை சேர்ந்த திரிதேவ் 705 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.  

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல்...வெளியிட்டார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். 

எதிர்க்கட்சி துணைத் தலைவராகவே நீடிக்கிறாரா ஓபிஎஸ்..?

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய காங்கிரஸ் தலைவர் யார்..? மல்லிகார்ஜீன கார்கே - சசிதரூர் போட்டி

புதிய காங்கிரஸ் தலைவர் யார்..? நாடுமுழுவதும் இன்று வாக்குப்பதிவு - மல்லிகார்ஜீன கார்கே - சசிதரூர் போட்டி

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

75 டிஜிட்டல் வங்கி பிரிவுகள் அர்ப்பணிப்பு..!

நாட்டில் 75 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், நகரி சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொலம்பியா மலை சாலையில் விபத்து - 20 பேர் பலி, 5 பேர் படுகாயம்

கொலம்பியா மலை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி, 5 பேர் படுகாயம். 

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 149வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 149வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.