Breaking LIVE : TNPSC Group 2 2A Result: குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டின் கடைசி சந்திர கிரகண நிகழ்வு தென்பட தொடங்கியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ஜப்பான் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குக்கூ படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்குகிறார்.
குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இன்று செயல்படாது என அறிவிப்பு வெளியானதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மருத்துவமனை வாசலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ பகுதியில் தீ விபத்து நிலக்கரி கொண்டு செல்லப்படும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் தீப்பற்றியதால் பரபரப்பு பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காரைக்கால், திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று நடை சாற்றப்படாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
அமைச்சர் பொன்முடி சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் : அண்ணாமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி அனைத்து வித தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 11 மணி நேரம் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே ஆணையம் அமைக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு நேற்று 38 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 கன அடியாக சரந்துள்ளது.
கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 110 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 100 கனஅடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல், புழல் ஏரிக்கு நேற்று 165 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 84 கனஅடியாக சரிந்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, குன்றத்தூர், சோழிங்கநல்லூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 171வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -