Breaking LIVE : சென்னையில் திடீர் கனமழை - வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சென்னையில் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால், பணி முடிந்து திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
சென்னை - பெங்களூர் - மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் அரசியலமைப்பு யாரையும் விலக்க அனுமதிக்கவில்லை. மேலும், இந்த சட்ட திருத்தமானது சமூக நீதியின் கட்டமைப்பையும் அதன் மூலம் அடிப்படை கட்டமைப்பையும் மாற்றுகிறது என நீதிபதி ரவிந்தர பட் தெரிவித்துள்ளார்.
நீதபதி எஸ்பி பார்திவாலாவும் இந்த சட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை என கூறி சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளார்
அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என நீதிபதி பிலா திரிவேதி தெரிவித்துள்ளார்.
இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என நீதிபதி மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு
EWS : 10% இட இதுக்கீடு வழக்கு: 4 தீர்ப்புகள் வெளியீடு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,200 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.4775 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை - மைசூரு இடையே 5வது வந்தே பாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 5,093 நிவாரண முகாம்கள் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், லாலு கட்சி, சிவசேனா, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் 43 பேர் பயணித்த நிலையில் 26பேர் மீட்கப்பட்டனர்.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 170வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -