கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியதையொட்டி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நடை பாதையாகவும், வாகனங்களிலும் சபரிமலை நோக்கி ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். இந்த நிலையில் கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலை வழியான தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாக சென்று குமுளி நோக்கி சபரிமலை செல்லலாம். அப்படி செல்லும் பக்தர்கள் பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு சபரிமலை சென்று விட்டு சொந்த ஊருக்கு திண்டுக்கல் வழியாக சென்ற கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கூகுள் மேப்பால் வழி மாறி சென்ற நிலையில் 7 மணி நேரத்திற்கு பிறகு போலீசாரால் மீட்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டுறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர்.
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்த பரசுராமர் என்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் தனது மூன்று சக்கர இருசக்கர வாகனத்தில் சபரிமலை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது தான் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து குறுக்குப் பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பை அவர் பயன்படுத்தியுள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு வத்தலக்குண்டுவை அடுத்துள்ள எம்.வாடிப்பட்டி பகுதிக்குள் சென்றவர் தேசிய நெடுஞ்சாலையை தொடும் சாலையை தவற விட்டுவிட்டு சமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் சாலையில் சென்றுள்ளார்.
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
அங்குள்ள பாலத்தைக் கடந்தவர் எதிர்பாராத விதமாக கண்மாய் பகுதியில் இருந்த சேற்றில் வசமாக சிக்கி உள்ளார். இரவு நேரம் என்பதாலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும் உதவிக்கு யாரும் வரவில்லை . இதனைத் தொடர்ந்து சுமார் 7மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த பரசுராமர் கர்நாடகா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து.. போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
இதனை அடுத்து போலீசார் நள்ளிரவு 2 மணிக்கு ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட ஐயப்ப பக்தரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த போலீசார் அவருக்கு உணவு வழங்கினர். இன்று காலை சேற்றில் சிக்கிய மூன்று சக்கர வாகனத்தை மீட்ட போலீசார் ஐயப்ப பக்தரை சொந்த ஊருக்கு பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு போலீசாருக்கு கர்நாடகா போலீசார் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்தனர். கூகுள் மேப்பை நம்பி பாதை மாறி சேற்றில் சிக்கிய ஐயப்ப பக்தர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.