Breaking LIVE : மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
"ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவல்ல. பல மொழி என்றால் இந்த நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும்; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
"இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கை தான் காரணம்; கார்ப்பரேட் மற்றும் சனாதனம் ஆகிய இரண்டும் தான் மோடி அரசின் கொள்கை" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மழைநீர் தேங்காமல், ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகளை மேற்கொண்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி ரூ.275 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளை கண்ணியக் குறைவாக திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் பேசியதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடி பசும்பொன் வருவதாகவும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் நிர்மல்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை தொடரில் இது அந்த அணிக்கு முதல் தோல்வியாகும். இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து பேரணியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், மோர்பியில் பால விபத்து நேரிட்ட இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. எனினும், அதிருஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கரூர், புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டக் கோரிய வழக்கு விவகாரத்தில் "காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Emergency Numbers Chennai Rain : சென்னையில் மழைநீர் தேங்குதல், மின்வெட்டு, மின்கசிவு புகார்களுக்கு அவசர எண்கள் அறிவிப்பு
மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை
கணேஷ்புரம் சுரங்கப் பாதை
வியாசர்பாடி சுரங்கப் பாதை
எம்.சி. சாலை சுரங்கப் பாதை ஸ்டான்லி மருத்துவமனை அருகில்
ஸ்டான்லி நகர் சுரங்கப் பாதை
வில்லிவாக்கம் சுரங்கப் பாதை
ஹரிங்டன் சாலை சுரங்கப் பாதை
துரைசாமி சுரங்கப் பாதை
ஜோன்ஸ் சாலை சுரங்கப் பாதை
மேட்லி சுரங்கப் பாதை
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை
மவுண்ட் சுரங்கப் பாதை
தில்லை கங்கா நகர் சுரங்கப் பாதை
சென்னை சாலைகளில் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.63.70 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.63,700ஆக விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,640 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாகை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
CM stalin In Meeting regarding Tamilnadu Rain : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவ மழை ஆயத்த பணிகள் தொடர்பாக இன்று காலை ஆய்வுக் கூட்டம்
Schools Leave : தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..! எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
Background
வடகிழக்கு பருவமழை முன்னேற்ற காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -