Breaking LIVE :வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்-தமிழக அரசு உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
ஃபேஸ்புக் தாய் நிறுவனம் மெட்டா, இந்திய வணிகத்துக்கு தலைமையாக நியமிக்கப்பட்டார் சந்தியா தேவநாதன்
அக்டோபர் மாத ஊதியம் 2 வாரங்களாக வழங்கப்படாத நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்பிக்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் காலதாமதம் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 14 பேருக்கும், 21-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பருவநிலை மாற்றம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிரமாக மெட்ராஸ் ஐ பரவுகிறது. சராசரியாக மருத்துவமனை 1-க்கு 100 முதல் 120 பேர் வரை சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும், தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு
வாய்ப்பு
சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் தொடங்கியது. மாநகர பேருந்து, மெட்ரொ, புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை
மருத்துவர்களின் கவனக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்.
அறுவை சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தி தணிக்கை குழு அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமாருக்கும் ரூபி ஆர். மனோகரன் எம் எல் ஏவுக்கும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நவ.19 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூ. 67.20 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.67,200ஆக விற்பனையாகிறது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.4,950 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை, காரைக்கால் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பருத்தித்துறை அருகே கைது செய்து மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
குற்றாலம் மெய்ன் அருவியில் ஐயப்ப கோயிலுக்கு மாலை அணியும் பக்தர்கள் மட்டும் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
குற்றாலம் மெய்ன் அருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி, தமிழ் சங்கமம் இன்று தொடங்குகிறது. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் உள்ளிட்டோர் ரயிலில் காசிக்கு புறப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் புறப்பட்ட ரயிலுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 180வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -