Breaking LIVE: கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
கரூரில் விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தமிழக ஆளுநர் தனக்குரிய பொறுப்பில் இருந்து செயல்படாமல் பாஜக தலைவராக செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத துலா உற்சவத்தின் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிற வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளி ரூ. 68.50 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.68,500ஆக விற்பனையாகிறது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ரூ.39,520 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 39 உயர்ந்து ரூ.4,940 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 20,200 கன அடியில் இருந்து 21,700 கன அடியாக அதிகரிப்பு.
கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) உயிரிழப்பு; உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
சென்னையில் சிகிச்சையின்போது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். 17 வயதான பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலதுகால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
வங்ககடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்தம்: 19ம் தேதி முதல் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்
ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து அமேசானில் ஆட்குறைப்பு நடவடிக்கை; பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்
மண்டல கால பூஜைக்களுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு; பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 178வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -