Breaking LIVE : நாடாளுமன்ற தேர்தல் - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 12 Nov 2022 03:48 PM
Breaking Live: நாடாளுமன்ற தேர்தல் - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் பாஜக  மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழ் மொழியை விரும்பிக் கற்க விரும்பியவர் காந்தி; தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும்: காந்தி கிராம பல்கலை.யில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ் மொழியை விரும்பிக் கற்க விரும்பியவர் காந்தி; தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும்: காந்தி கிராம பல்கலை.யில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் இன்று தாமதமாக புறப்படும்

ராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக  இன்று (11.11.2022) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11.30 மணிக்கு 430 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின் 

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

10% இடஒதுககீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

10 % இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

தங்கம் விலை அதிகரிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ440 உயர்ந்து, ரூ.39,000-க்கு விற்பனையாகிறது.

கனமழை எதிரொலி : அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக தேர்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று தாம்பரம், அம்பத்தூர் மற்றும் கிண்டி பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை

பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருவதை முன்னிட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Background

தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 174வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 174வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர் 9ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.