Breaking News Tamil LIVE: சென்னை புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி IAS நியமனம்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 25 May 2022 11:09 PM
சென்னை புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி IAS நியமனம்..!

சென்னை புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி IAS நியமிக்கப்பட்டுள்ளார். 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாஷின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை !

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாஷின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றிய கல்லூரி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி -முதல்வர் ஸ்டாலின்

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதில் அவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தொடர்பாக சில கருத்துகளை பேசி வருகிறார். 

பிரதமர் மோடியின் வருகையின் போது ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் மோடி வர உள்ள நிலையில் அப்போது ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பெண் பாலியல் வன்கொடுமை-இரால் பண்ணைக்கு சீல் !

ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இரால் பண்ணை அனுமதியின்றி இயங்கி வந்தது. இதனால் அந்த பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மும்பையிலும் அமலுக்கு வரும் ஹெல்மெட் அணியும் விதிமுறை

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் விதிமுறை அடுத்த 15 நாட்களில் மும்பையிலும் அமலுக்கு வருகிறது. இவ்வாறு ஹெல்மெட் அணியாமல் விட்டால் 500 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகியவை அமலுக்கு வர உள்ளது.

திருச்சி மணப்பாறையில் குளித்த 3 சிறுவர்கள் பலி

திருச்சி மணப்பாறை அருகே குலத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை முதல்வர் சந்திப்பு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி சிந்துவை முதல்வர் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

நிஃப்ட் இயக்குனர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

நிஃப்ட் உதவி இயக்குநர் இளஞ்செழியனுக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையை தராமல் தனி அறையில் அமர வைத்து சாதி பாகுபாடு காட்டியதாக நிஃப்ட் இயக்குனர் அனிதா, துணை இயக்குனர் நரசிம்மன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தரமணி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். தனியார் பள்ளிகளும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

’’மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு

புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரமதர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், கண்காணிப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் கபில்சிபில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

Background

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாளை அறிவிப்பு வெளியிடுகிறார்.


இத்துடன் 2022-23ஆம்  கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் நாளை சென்னையில் வெளியாக உள்ளன.


கொரோனா தொற்று பாதிப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 





இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.




மே 14 முதல் கோடை விடுமுறை 


இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 2ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


எனினும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.


முன்கூட்டியே திறக்கக் கோரிக்கை


எனினும் மாணவர்களின் கற்றல் இழப்பைத் தவிர்க்க, பள்ளிகளை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.


இத்துடன் 2022-23ஆம்  கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் நாளை சென்னையில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.