Breaking News Live: மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகிறார் தேவிந்திர பட்னவிஸ்
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தகவல்களாக உடனுக்குடன் கீழே காணலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராகிறார் பாஜக-வின் தேவிந்திர பட்னவிஸ்.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு வைகோ, செல்வப்பெருந்தொகை உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாழ்த்துகளை தெரிவித்து, ஆதரவை தெரிவித்தனர்.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ஆதரவு கோரினார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.
மகாராஷ்ட்ராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வின் நிலை வருத்தம் அளிப்பதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் உள்ள நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் பலி
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜுலை 11 ம் தேதி கூட உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரும் மனுவை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 39 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,819 ஆக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டியா?
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சைவானை 19-21,21-9,21-14 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் சுயேட்சயாக அதிமுகவினர் போட்டியிட உள்ளதாக தகவல்.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி- 53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
பெட்ரோல், டீசல் விலை 40வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதுவரை உலகளவில் 55.15 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 52.67 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொடிய தொற்றால் இதுவரை 63.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
3,552 பணியிடங்கள் நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.
Background
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே (புதன்கிழமை) நேற்று ராஜினாமா செய்துள்ளார். இன்று நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா தலைமையிலான அரசு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு சில நொடிகளிலேயே, அவர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.
பேஸ்புக் லைவ் மூலமாக அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். ஜனநாயகம் பின்பற்றப்பட வேண்டும். நான் எதிர்பாராத விதமாக அதிகாரத்திற்கு வந்திருந்தேன். அதே பாணியில் வெளியே செல்கிறேன். நான் நிரந்தரமாக செல்ல மாட்டேன். இங்கேயே இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன். நான் முதலமைச்சர் பதவியையும், எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" என்றார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு சென்று தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். உத்தவ் தாக்கரேவுக்கு தற்போது 15 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க கோரி சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜெ.பி. பரிதிவாலா ஆகியோர் கொண்ட விடுமுறை கால அமர்வு, "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு தடை விதிக்க போதுமான காரணங்களை எங்களால் ஏற்க முடியவில்லை.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்பு அமர்வு ஜூன் 28ஆம் தேதியிட்ட ஆளுநர் உத்தரவில் உள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்" என்றார்கள்.
இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வரும் முடிவு ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் தீர்ப்புக்கு உட்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சிவசேனாவைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் ஒரு பகுதியினர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் அன்று முடிவு செய்யும்.
சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 39 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -