Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் OTT தளங்களில் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நடித்த பல்துறை நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் OTT தளங்களில் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நடித்து வரும் பிரபல நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் நடித்த ஸ்லீப்பர் ஹிட், 12th fail உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட 37 வயதான நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திடீரென ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திடீர் ஓய்வு:
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் விக்ராந்த் மாஸ்ஸி பதிவிட்டுள்ள பதிவில், "வணக்கம், கடந்த சில வருடங்கள் மற்றும் அதற்குப் பிறகும் சிறப்பானவை. உங்கள் அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஆனால் நான் முன்னேறும்போது, மீண்டும் அளவீடு செய்து திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது என்பதை உணர்கிறேன். 2025 ஆம் ஆண்டு ஒரு கணவனாக, ஒரு நடிகனாக, கடைசியாக ஒருவரையொருவர் சந்திப்போம் திரைப்படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுக்கு இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் மீண்டும் நன்றி.
Just In




ரசிகர்கள் சோகம்:
அவரது திடீர் ஓய்வால் ரசிகர்கள் சோகமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவில், விக்ராந்த் மாஸ்ஸியின் விலகல் உண்மையிலேயே ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. *எ டெத் இன் தி கஞ்ச்* மற்றும் *மிர்சாபூர்* ஆகியவற்றில் அவரது பாத்திரங்கள் மறக்க முடியாதவை. அவரது புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
மற்றோரு ரசிகர்,அவரது குறிப்பிடத்தக்க நடிப்பு மற்றும் அடக்கமான ஆளுமை மில்லியன் கணக்கான இதயங்களை வென்றது. "இந்த பயணம் நம்பமுடியாதது, ஆனால் புதிய பாதைகளில் நடக்க வேண்டிய நேரம் இது." - விக்ராந்த் மாஸ்ஸி அவரின் கூற்றை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
விக்ராந்த் நடிப்பிலிருந்து விடைபெறத் தயாராகி வரும் நிலையில், அவரது திரைத்துறையில் அபாரமான உழைப்புக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.