ஆப்பிரிக்கா நாடான கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N'Zerekore இல் ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நடுவரால் வந்த வினை:
2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த கினியாவின் இராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிக்கும் வகையில் அங்கு கால்பந்து போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: WTC Points Table: அங்குசாமி நீ நல்லா இருப்ப! வெளியேறிய நியூசிலாந்து! இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்
இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் நடுவர் ஒருவர் வழங்கிய சர்ச்சையான முடிவுக்கு பிறகு தான் கலவரம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடந்த கலவரக்காட்சிகள் மற்றும் மைதானத்தில் ஏராளமான உயிரிழப்புகளைக் காட்டும் சமூக ஊடகக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் தீ வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
100 பேர் பலி:
இந்த கலவரத்தில் 100க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் அனைத்தும் இடங்களிலும் மனிதன் உடல்களாக தென்படுவதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் தனியார் ஊடகம் ஒன்றிருக்கு பேட்டியளித்தாக சொல்லப்படுகிறது. கினியாவின் இராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிப்பதின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டதாகக கூறப்படுகிறது.
டூம்பூயா வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட உள்ளதால், கினியாவில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடக்கின்றன என்றும் இதனால் அங்கு இது போன்ற சிறு சிறு வன்முறைகள் நடைப்பெறுவது வாடிக்கையாகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த வன்முறை காட்சிகளின் உண்மை தன்மை குறித்து இது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது