Breaking News Live: எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தகவல்களாக உடனுக்குடன் கீழே காணலாம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம்
உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
A,&b பார்ம் இரண்டிலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள்
மகாராஷ்டிராவில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
வேலூரில் 32.89 கோடி மதிப்பிலான 50 புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பேசுகையில், நான் துரிதமாக செயல்பட அமைச்சரவை தான் காரணம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரத்தின் பெயரை சாம்பாஜி நகர் என்றும், உஷ்மானாபாத் பெயரை தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எல்.இ.டி. விளக்குகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஹீட்டர்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பேனா மை, கத்தி ப்ளேடு ஆகியவற்றிக்கும் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. - நிதியமைச்சர்
ஜி.எஸ்.டி கூட்டம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.79.04ஆக சரிவடைந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில், ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, விஜயவாடா அரசு மருத்துவமனையில் ICU -வில் சிகிச்சையில் இருக்கிறார்.
இவர் வடிவேலு கூட்டணியில் ஏராளமான ஹிட் காமெடிகளை கொடுத்துள்ளார்!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர்கள் சரத்குமார், நிழல்கள் ரவி, நடிகை குஷ்பூ, ரம்பா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மீனா கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரஜினி நேரில் வருகை
நடிகர் பிரபுதேவா, மன்சூர் அலிகான், நடிகை ரம்பா, நடன இயக்குநர் கலா ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்த மீனாவின் கணவர் உடலுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கனையாலால் என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டது குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு - இந்த கொடூர கொலைக்கு பின்னணியில் வேறு எதுவும் சர்வதேச அமைப்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் உச்சக்கட்ட பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதா ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 256 குறைந்து ரூ. 37,864 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் பெரும்பான்மையான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும்,ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என தன்னிடம் வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் சிவசேனாவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 38 பேரோடு பாஜக பக்கம் சென்றுள்ளதால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நாளை மாலை 5 மணிக்குள் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரவிய செய்தி உண்மையல்ல என அம்மாநில ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
Background
நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் மற்றும் இருதயம் பிரச்சனை காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் சினிமாத்துறையினர் பலரும் மீனாவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.குழந்தை நட்சத்திரம் முதல் மகளை சினிமாவில் அறிமுகம் செய்தது வரை சினிமாவில் மீனா நீண்டகாலமாக பயணித்து வருகிறார்.
1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ரஜினியின் எங்கேயே கேட்ட குரல், தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தின் மூலம் மீனா தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற ஆரம்பித்தார். அதன்பின் குழந்தை நட்சத்திரமாக 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அவருக்கு ராஜ்கிரண் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு திரும்பி பார்க்க முடியாதபடி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா, குசேலன், அண்ணாத்த ஆகிய படங்களிலும், கமலுடன் அவ்வை சண்முகி, அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் அவர் படங்களில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் அவர் நடித்த படங்களில் நாட்டாமை, பாரதி கண்ணம்மா, பொற்காலம், சேதுபதி ஐபிஎஸ்,வானத்தைப் போல, த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்கள் மிக முக்கியமானவை. தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.
மீனாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், அவரின் கணவர் வித்யாசாகர் கடுமையான நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார்.
48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -