Breaking News LIVE : நான்தான் கஜினி படத்துக்கு முதல் சாய்ஸ்.. கதை பிடிக்கல.. மாதவன் சொன்ன சீக்ரெட்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குடன் காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.
ஜாமர் கருவி, ஜிபிஎஸ் பிளாக்கர் கருவிகளை தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை...மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது தவறானது..தனியார் நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை வாங்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ தடை என மத்திய அரசு உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வரும் 7-ந் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மேலும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியை அணுகலாம் என்று கூறியுள்ளது.
நீலகிரி, திருப்பூர். கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிராகரித்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மீது சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மகாராஷ்ட்ரா சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை - வழக்குகளை உரிய அமர்வு முன்பாக அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
மதுரை கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது - உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்களுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு மாவட்டத்தில் இருந்து சைனஜ் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ஜங்கலா கிராமம் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு மாவட்டத்தில் இருந்து சைனஜ் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ஜங்கலா கிராமம் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 13,958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்து 864 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,135 ஆக உயர்ந்துள்ளது. 24 பேர் கொரோனா காரணமாக மரணம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,135 ஆக உயர்ந்துள்ளது. 24 பேர் கொரோனா காரணமாக மரணம்.
வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். விரைவில் ஏதேனும் ஒரு வடஅமெரிக்க தமிழ் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்பேன் என்றும், உலகின் எந்த நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்தின் கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மகாராஷ்ட்ராவில் புதிதாக அமைந்துள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சருக்கு ஷிண்டேவுக்கு ஆதரவாக 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பொள்ளாச்சியில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை கேரளாவில் மீட்கப்பட்டது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி யூனுஸ் - திவ்ய பாரதி தம்பதியினருக்கு குழந்தை பிறந்திருந்தது. 6 தனிப்படை அமைத்து குழந்தை தேடப்பட்டு வந்த நிலையில் பாலக்காட்டில் குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Background
காலரா நோய் பரவல் எதிரொலியால் காரைக்காலில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குடன் காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் 114 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ளார்.
காரைக்காலில் சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலருக்கு காலரா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. காரைக்காலில் காலரா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கும் காலரா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, காரைக்காலில் மட்டும் சுமார் 1,589 பேருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாாகியுள்ளனர். புதுச்சேரி முழுவதும் காலரா தொற்று பரவியிருப்பதை அறிந்த சுகாதாரத்துறை இன்று மாநிலம் முழுவதும் பொது சுகாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
*அதன்படி கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
*அனைத்து வீடுகளிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், திருமணக்கூடங்கள், மருத்துவமனைகளில் கட்டாயம் கொதிக்க வைத்து குடிநீர் அல்லது சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கி 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் மன்சூர் முஹமது பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மேலும், பொதுமக்கள் இனி வரும் நாட்களில் கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும், சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவவும், காய்களை நன்றாக கழுவி, வேகவைத்து சமைத்து சாப்பிடவும் அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காலரா பாதிப்பு பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் காலரா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -