Breaking LIVE: காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான 4,800 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு நாளை விசாரனைக்கு வருகிறது. முதல்வராக இருந்தபோது நெடுஞ்சாலைதுறை ஒப்பந்தங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடை சத்திரம், வெள்ளை கேட், பொன்னேரிகரை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே கீழச்சேரி பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி,டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட நான்கு பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நியனம்.
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலஜி, எம்.சி. சம்பத். உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட 10 பேர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறுணியம் பலராமன், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அதிமுக-வில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் பொறுப்பு வகிப்பார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாணவி, விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Draupadi Murmu: 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார் திரெளபதி முர்மு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து 37, 760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 450, தேசிய பங்கு சந்தை நிப்டி 100 புள்ளிகள் மேல் சரிவானது
குடியரசுத் தலைவராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா
தமிழகத்திற்கு வந்தது ஒலிம்பியாட் ஜோதி..
புதுச்சேரியில் இருந்து கோவை பந்தய சாலைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு
மின் கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சனைகளை எதிர்த்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இன்று ( ஜூலை 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
Background
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் (நேற்று) ஜுலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்காரணமாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், முன்னாள் ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவரான யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். கடந்த 18-ஆம் தேதி ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
அந்த வாக்குகள் கடந்த 21ம் தேதி எண்ணப்பட்டன. முன்பாக எண்ணப்பட்ட 748 வாக்குகளில் திரெளபதி முர்மு 540 வாக்குகளும், 208 வாக்குகளும் பெற்றிருந்தனர் தொடர்ந்து 2-ஆம் சுற்று நிறைவில், திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299-ஆக இருந்தது.
இன்று இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு. அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777. எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 ஆக இருக்கிறது.
மூன்று சுற்றுகளிலும் திரெளபதி முர்மு முன்னிலை பெற்றதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இதன் மூலம் அவர் இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவராக இன்று பதவியேற்க உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -