Breaking LIVE: தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம்?

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 24 Jul 2022 12:56 PM
Breaking LIVE: தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம்?

யார் உண்மையான அதிமுக என இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். 

TNPSC குருப்- 4 தேர்வு நிறைவடைந்தது

தமிழ்நாடு முழுவதும், இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த TNPSC குருப்- 4 தேர்வானது நிறைவடைந்தது

Breaking LIVE: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி...

டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

Breaking LIVE: வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், மீண்டும் ஒருமுறை வரலாறு படைக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வரும் நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். 

வெள்ளி வென்றது மகிழ்ச்சியே... பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி!

காற்றின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும் வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

சென்னை மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் மாதிரி போட்டி தொடங்கியது

சென்னை மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் மாதிரி போட்டி தொடங்கியது. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்குகளில் 707, போர்டுகளில் 1414 விளையாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர். முன்னதாக அமைச்சர்கள் thamo அன்பரசன் மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Breaking LIVE: இந்தியாவில் ஒரேநாளில் 20,279 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 36 ஆக உள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,52,200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 18,143 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Breaking LIVE: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சரிவு..!

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!

மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை எடுக்க கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று நாட்டுமக்களுடன் உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்..!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் மக்களுடன் உரையாற்றுகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். 

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று முதல் 27 ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.


இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


இத்தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்புப் பேருந்துகள் முறையாக நின்று செல்ல ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும் என்றும், விடைத்தாள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என்றும் அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.