Breaking News LIVE :தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 300 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147. 50 கட்டணம். 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக தனது கருத்துக்களை கேட்க வேண்டும் என ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்.மேல் முறையீட்டு மனுமீது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக தனது கருத்துக்களை கேட்க வேண்டும் என ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்.
38 மாவட்டங்களில் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவிப்பு.
கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க மத்திய ஆரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்பிஐ பரிந்துரை. கிரிப்டோ கரன்சியை சர்வதேச ஒத்துழைப்புடன் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது - நிர்மலா சீதாராமன்
கிரிப்டோ கரன்சி குறித்து மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில். கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தகவல்
நடிகர் சூர்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, ஜூலை 21 ஆம் தேதிக்கு ஜெய் பீம் சர்ச்சை தொடர்பான வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடலில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் - 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம்
மேகதாது வழக்கு விசாரனை நாளை மறுநாள் வரவுள்ள நிலையில் டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க முடிவு.
வளிமண்டல கீழடுக்கு சுழல் காரணமாக இன்று முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தின் டீ கடைகளில் அச்சிட்ட பேப்பரில் பஜ்ஜி, வடை தர தடை. தடையை தாண்டி அச்சிட்ட பேப்பரில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
குடும்ப பிரச்சனை காரணமாக சேலம் +2 மாணவி தற்கோலை முயற்சி மேற்கொண்டார் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்.
இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து ஆற்றில் விழுந்தது. இதுவரை 12 உயிரிழந்த நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல்.
நடந்துவரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார்.
மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி.
மாநிலங்களவை உறுப்பினராக ப.சிதம்பரம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
ஈபிஎஸ்ஆதரவாளர்கள் 15 பேருக்கும் , ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேருக்கும் ராயப்பேட்டை போலீஸ் சம்மன்.
குடியரசு தலைவர் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தலைமை செயலகத்தில் நடக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்.
குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குபதிவு நாடு முழுவதும் துவங்கியது. இன்று மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்ப உள்ளார்
தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடும் வகையில் அரசு கட்டிடங்கள் வண்ணமையமாக காட்சியளிக்கின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் சதத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் மார்கரேட் ஆல்வா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அக்னிபத், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்
நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
Background
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இன்றும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 58வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று ( ஜூலை 18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -