Breaking LIVE:இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நிறைவடைந்தது

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Jul 2022 05:41 PM
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நிறைவடைந்தது

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, இன்று நடைபெற்ற நுழைவுத்தேர்வு நிறைவடைந்தது.

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்: மார்கரெட் ஆல்வா

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்

குடியரசு துணை தலைவர் வேட்பாளர்: அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் குறித்து, டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை விவகாரம்: வரும் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

இலங்கை பிரச்னை குறித்து விவாதிக்க, வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.





NEET Exam: நீட் தேர்வு தொடங்கியது; 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது.  தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில் டெல்லியின் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. 

கொரோனாவுக்கு ஒரே நாளில் 49 பேர் பலி..!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

இந்தியாவில் ஒரேநாளில் 20, 528 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் ஒரேநாளில் 20, 528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Breaking LIVE: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை இன்று எழுதுகின்றனர்.

Breaking LIVE: இந்தியா-சீனா இடையே எல்லை பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

Breaking LIVE: கனமழை எதிரொலி: தபி ஆற்றில் வெள்ள பெருக்கு

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக தபி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Breaking LIVE: பாஜகவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் ஜெகதீஷ் தன்கர்

குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் மேற்க வங்க ஆளுநர் ஜெகதீஷ் தன்கர் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்.

Breaking LIVE: பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நாடாளுமன்ற அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Breaking LIVE: மேட்டூர் அணைக்கு அதிகரிக்கும் நீர் வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு காவிரியிலிருந்து 1.23 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

Breaking LIVE: குடியரசுத் தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டு எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 57வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.24 ரூபாய்க்கும் இன்றும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 47ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இந்நிலையில் இன்று( ஜூலை 14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.