Breaking LIVE: 'காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு'
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
மாங்கனி இரைத்தல் திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரெளபதி முர்முக்கு ஆதரவு அளிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது.
இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்.
காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 கன அடியாக உயர்ந்துள்ளது.
குஜராத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு வரும் 19ஆம் தேதி விசாரணை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் கடலில் இலங்கை கடற்படை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியிலிருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Background
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 52வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.24 ரூபாய்க்கும் இன்றும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 47ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று( ஜூலை 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு:
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அத்துடன் அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும் சிறப்பு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -