Breaking News LIVE: திரௌபதி முர்முவை அழைக்க ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு- ஒரே மேடையில் இபிஎஸ், ஓபிஎஸ்?
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு, நாளை கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். சென்னையில் நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முர்முவுக்கு சிரோன்மணி அகாலி தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னையில் வரும் 4ம் தேதி தொழில் முதலீட்டு மாநாடு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் நோக்கில், மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.
காவல்துறை உயரதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லியாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்ப பெற தொடங்கியது.
முகமது நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு.. நுபுர் ஷர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கிரையாக்கிவிட்டது - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் விலை 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைமை கழக செயலாளர் என்ற பொறுப்பை மாற்றியுள்ளார்.
சென்னையில் நல திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்வின் போது காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடனமாடும் வாகனத்தை கொடி அசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருந்த 15 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்
19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று அரசு உத்தரவு.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று மதியம் தொடங்குகிறது.
ஆதார்-பான் கார்டு இணைக்க இன்று முதல் அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடக்கம்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் சிண்டே நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை.
Background
தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்தது.
இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிபிஎல் குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாதத்தின் முதல் நாளில் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் விரைவில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலை:
ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -