Pongal Vaikka Nalla Neram 2025: தமிழர்களின் முதன்மை பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகை. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். மார்கழி முடிந்து தை பிறக்கும் முதல் நாள் தமிழர்களால் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் களைகட்டி காணப்படுகிறது. தைப் பொங்கல் பண்டிகை வரும் 13ம் தேதி செவ்வாய் கிழமை காெண்டாடப்பட உள்ளது. நன்னாளான பொங்கல் நாளில் புத்தம் புது பானையில் பொங்கலை நல்ல நேரத்தில் வைப்பது அவசியம் ஆகும். 


எந்த நேரத்தில் பொங்கல் வைக்கக்கூடாது?


பொங்கல் பண்டிகை நாளில் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் பொங்கல் வைக்கக்கூடாது. அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். 


பொங்கல் எப்போது வைக்க வேண்டும்?


பொதுவாக தைத் திருநாளானது உலகிற்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக திகழும் சூரிய பகவானை போற்றி கொண்டாடப்படும் பண்டிகை என்பதால்  சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைக்கத் தொடங்கி சூரியன் உதிக்கும்போது பொங்கல் பொங்குவது போல பார்த்துக் கொண்டால் கூடுதல் சிறப்பு ஆகும்.


அப்படி அந்த குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் வைக்க முடியாவிட்டால் கீழே குறிப்பிட்ட நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.  உத்தமம், லாபம், அமிர்தம் ஆகிய நல்ல நேரத்தில் பொங்கல் வைத்துவிடுவது நல்லது ஆகும்.


உத்தமம்:


உத்தம நேரம் காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைப்பது சிறப்பு ஆகும். 


லாபம்:


லாப நேரத்தில் பொங்கல் வைப்பதும் நல்லது ஆகும். லாப நேரமானது காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வருகிறது. இந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம். 


அமிர்தம் :


அமிர்த நேரமானது மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வருகிறது. முடிந்தவரை பொங்கலை மதியம் 12 மணிக்குள் வைத்து விடுவது நல்லது ஆகும். அப்படி வைக்க முடியாவிட்டால் இந்த அமிர்த நேரத்தில் வைப்பது நல்லது ஆகும். 


அதேபோல சூரிய ஓரை, சுக்கிர ஓரை மற்றும் குரு ஓரை நேரங்களில் பொங்கல் வைப்பது நல்லது ஆகும். 


சூரிய ஓரை:


காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை


சுக்கிர ஓரை:


காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை


குரு ஓரை:


மதியம் 12 மணி முதல் 1 மணி வரை


பொங்கல் பண்டிகை நாளில் முடிந்தவரை மதியம் 12 மணிக்குள் பொங்கல் வைத்துவிடுவது நல்லது ஆகும்.