Breaking LIVE: ஆவின் மூலம் குடிநீர் விற்பனை : அமைச்சர்

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள..

முகேஷ் Last Updated: 03 Aug 2022 12:39 PM
ஆவின் மூலம் குடிநீர் விற்பனை : அமைச்சர்

விரைவில் ஆவின் நிறுவனம் சார்பில், குடிநீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யபடும். தமிழ்நாட்டில், ஆவினுக்குச் சொந்தமாக 28 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் 1 லிட்டர், அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும் - பால்வளத்துறை
சா.மு.நாசர்

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

மின்விநியோகம் தொடர்ந்து சீராக உள்ளது; தடையில்லை.மின் விநியோகம் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணம் தொடர்பாக சமூக வளைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர்.

ஈ.பி.எஸ். மீதான வழக்கு- சி.பி.ஐ. விசாரணைக்கான ஆணை ரத்து

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

சுதந்திர தின விழாவில் மக்களுக்கு அனுமதி

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மக்களுக்கு அனுமதி. மெரினா ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்களை அழைத்து வர வேண்டாம்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை. 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

மாணவர்கள் வெளியேறினாலும் முழுக் கட்டணம் தர வேண்டும் : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி

கல்லூரி, பல்கலை கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்.31 ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினாலும்  முழுக் கட்டணம் தர வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. 

சென்னையில் மழை..!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கன மழை எதிரொலியொட்டி, நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் 2வது நாளாக ரெய்டு..!

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் 2வது நாளாக வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கிட்டதட்ட 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் கண்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 74வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.