Breaking LIVE: 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
சென்னையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் திடீர் சந்தித்து பேசி வருகிறார்.
New Education Policy : 'தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என குறிப்பிடவில்லை' - மத்திய கல்வித்துறை இணையமைச்சர் பேட்டி..
புதிய கல்விக் கொள்கையை எதிர்கவில்லை என்றும் ஏற்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசு என கடிதத்தில் குறிப்பிடவில்லை என மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
Vinayagar Chathurthi : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக, பிரியாணி கடைகளை மூடவேண்டும் - காஞ்சிபுரத்தில் செயல்பாட்டு ஆணை
முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சுமார் 120 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சென்னையிலிருந்து துபாய் செல்ல இருக்கும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் மோதுகின்றன.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் சுற்றுப்பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அடல் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவையில் வரும் 29ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
இலவச திட்டங்களுக்கான சுமையை மற்றவர்கள் மீது செலுத்தக்கூடாது. அதற்கான நிதியை தங்களிடம் இருந்து ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி அசாத் ஜம்மு-காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து இந்து அமைப்புகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் நேற்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
Background
சென்னையில் 98வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 91வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -