Breaking LIVE: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

அசோக் மூ Last Updated: 19 Aug 2022 06:34 PM
அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளைக்கு உதவி புரிந்ததற்காக காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்

நாளை முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. 

தொடர் விடுமுறை நாட்களில்  கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை - முக்கிய ஆவணங்கள் மாயம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை தினத்தையொட்டி கலைநிகழ்ச்சிகள்

ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி கலைநிகழ்ச்சிகள்; போட்டிகள் அறிவிப்பு 

விளம்பரம் மூலம் அரசு பஸ்களின்  வருவாயை அதிகரிக்க முடிவு 

சென்னையில் விளம்பரங்கள் மூலம் மாநகர பேருந்துகளின் வருவாயை பெருக்கு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரம் மூலம் அரசுபஸ்களின்  வருவாயை அதிகரிக்க முடிவு 

சென்னையில் விளம்பரங்கள் மூலம் மாநகர பேருந்துகளின் வருவாயை பெருக்கு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Breaking LIVE: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியாவின் இல்லத்தில் சிபிஐ ரெய்டு

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியாவின் இலத்தில் சிபிஐ அதிகாரிகள் சோட்தனை நட்த்தி வருகின்றனர்.

Breaking LIVE: வடபழனி நிதி நிறுவனம் கொள்ளை வழக்கு 2 பேர் கைது

வடபழனி நிதி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் திருடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Breaking LIVE: தமிழ்நாட்டில் இன்று 15 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

Breaking LIVE: தமிழ்நாட்டில் இன்று 15 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

Breaking LIVE: ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்

Breaking LIVE: நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெய்ந்தி விழா கொண்டாட்டம்..

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 

Breaking LIVE: நடுவானில் எரிப்பொருள் நிரப்பும் சுகோவ் விமானங்கள்..

நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியாவின் சுகோவ் விமான காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Breaking LIVE: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஒபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

Breaking LIVE: அதிமுக வழக்கில் ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீடு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.

Background

சென்னையில் 90வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 89ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.





தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 










கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 







- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.