Breaking LIVE: என்.ஐ.ஏ. இயக்குனர் தமிழக டி.ஜி.பி.யுடன் நேரில் சந்திப்பு

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 29 Nov 2022 07:09 PM
என்.ஐ.ஏ. இயக்குனர் தமிழக டி.ஜி.பி.யுடன் நேரில் சந்திப்பு

என்.ஐ.ஏ. இயக்குனர் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

எஸ்.பி. மீதான வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர முறைகேடு, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சி.பி.ஐ. உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவிற்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் வரும் ஜனவரி 10-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு 

பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் - நீதிபதிகள்

பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

டிசம்பர் 1-ந் தேதி முதல் டிஜிட்டர் ரூபாய் சோதனை ஓட்டம்

டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்தியாவின் நான்கு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலைக்கு மட்டும் விடுமுறை..

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை.. தமிழக அரசு அடுத்த மாஸ் அறிவிப்பு..

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. 


sdat@tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம், இணைய வழையில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்க்கப்படும்  என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா..!

சென்னையில் டிசம்பர் 15 முதல் 22 வரை சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெறவுள்ளது. 

ADMK: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை நீட்டிப்பு

அதிமுக பொதுச்செயளாலர் தேர்தலுக்கான தடை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு. 


டிசம்பர் 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது இரு தரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவு.

அரியலூர், பெரும்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் - முதல்வர்

அரியலூர், பெரும்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்

எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாக காணப்படும் மாவட்டம்  அரியலூர்  - முதல்வர்

ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கலிங்க சிற்பங்கள் மாளிகை மேடு என தொல்லியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன - முதல்வர் ஸ்டாலின்

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் : முதல்வர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

6 மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கன மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடிக்கும் விடுமுறை..!

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மழை காரணமாக விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 190 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை:


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 192வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர்.29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.