Breaking LIVE: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வேட்டி, சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

மணிகண்டன் Last Updated: 19 Nov 2022 09:58 PM
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பு இன்றி மென்பொருள் சேவையை திடீரென துண்டித்தது.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கு நீண்ட பந்தம் உள்ளது - பிரதமர் மோடி

காசியும் தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசியை வளர்த்ததில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உள்ளது என காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வேட்டி, சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி

காசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையில் பங்கேற்றுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கைப்பற்றியது லைகா

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.





Breaking Live : பொங்கல் பண்டிகை - புதிய டிசைனில் இலவச வேட்டி சேலையை வழங்க அரசு முடிவு

பொங்கல் பண்டிகைக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் இலவச வேட்டி சேலையை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறங்களை கொண்ட பார்டர்களுடன் விலையில்லா வேட்டிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தின் முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி இட்டா நகரில் திறந்து வைத்தார்..

அருணாச்சல பிரதேசத்தின் முதல் பசுமை விமான நிலையமான டோனி போலோ விமான நிலையத்தை இட்டாநகரின் ஹோலோங்கியில் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். 645 கோடி மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது

அடுத்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் கனமழை..!

அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுருத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு. 

2 மருத்துவர்களைப் பிடிக்க 3 தனிப்படை..!

கால்பந்து வீராங்கனை ப்ரியா மரணத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து சென்னை காவல் துறை தேடி வருகிறது. 

குன்னூர் வெடிமருந்து ஆலையில் வெடி விபத்து.!

குன்னூர் வெடிமருந்து ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

டிசம்பர் 7இல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து சரிவு!

புழல் ஏரிக்கு நேற்று காலை 270 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 189 கனஅடியாக சரிவு நீர்இருப்பு 2,624 மில்லியன் கனஅடியாக உள்ளது ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Background

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


நீதிமன்ற வாசல் மூடல் : 


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்தத் தொடங்கினர். 


இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள்  வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத  வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


மூடப்படுவது ஏன்..?


இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் முதல்வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம் அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.


"ஆதார் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை" 


"மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மின் இணைப்புப் பெற்றவர்கள் இறந்திருந்தால் பெயரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் விநியோகம் ரத்து என்ற தகவல் தவறானது. 
கர்நாடகத்திலும் மின் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட மின் நுகர்வோர்களுக்கும் 36 மணி நேரத்திற்குள் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளன. அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மின்மாற்றிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அவர்களுக்கு உரிய பாராட்டுகளையும் நன்றியையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 
சென்னை அசோக்நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்கசிவு ஏற்பட்டது குறித்து கேட்கிறீர்கள்.
அந்தப் பள்ளிக்கு மின்சார வாரியம் மின்விநியோகம் அளித்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒயரிங் செய்ததில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 


இந்தச் சம்பவத்தை அடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நிலை இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை பெய்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.