Breaking LIVE: அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 11 Dec 2022 11:26 AM
Breaking LIVE: பாரதியாரின் 140-வது நினைவு தினம்: வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் திறப்பு!

பாரதியாரின் 140-வது நினைவு தினத்தை முன்னிட்டு வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நினைவு இல்லத்தில்  அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

Breaking Live : 6-ஆவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே நாட்டின் 6-ஆவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாக்பூர் ரயில் நிலையத்தில் 6-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  

Breaking Live : அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking LIVE: வாக்காளர் பட்டியலில் திருத்தம் - 23 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 23,03,310 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Breaking LIVE: வாக்காளர் பட்டியலில் திருத்தம் - 23 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 23,03,310 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Breaking LIVE: வாக்காளர் பட்டியலில் திருத்தம் - 23 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 23,03,310 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Breaking LIVE: உடுமலை அருகே மான்கறி பதுக்கிய நபர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலை பகுதியில் மான் கறி பதுக்கிய செந்தில்ராஜ் என்பவர் கைது - சாலையில் அடிபட்டு கிடந்த புள்ளிமானை வீட்டில் பதுக்கியவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Breaking LIVE: மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடிக்கு சேதம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் மாண்டஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் ரூ.3.45 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு - கிண்டி, சின்னமலை, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளது. 

Breaking LIVE: சபரிமலை கோவிலில் 24 நாட்களில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது - தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாதம் ஆகியவற்றின் மூலம் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 

Background

சென்னையில் அடுத்த 3 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், திருவள்ளூர்,  திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






மேலும் சென்னையில் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. புயல் கரையைக் கடந்த பின்னரும் வாரத்தின் விடுமுறை நாளான இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பாக வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 


11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


12.12.2022 மற்றும் 13.12.2022:   லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


14.12.2022: தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.