Breaking News LIVE: மாஸ்கோவில் ரஷ்ய அதிபரை சந்தித்த அஜித் தோவல்...!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ரஷ்ய அதிபர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை பேசினார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 6 காவலர்களிடம் சாட்சியம் பெற்று சி.பி.சி.ஐ.டி, பதிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 6 காவலர்களிடம் சாட்சியம் பெற்று சி.பி.சி.ஐ.டி, பதிவு செய்துள்ளது.
துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,000-ஆக உயர்வு
ஈரோடு வேப்பம்பாளையத்தில் பிரச்சாரத்தின்போது, சிறுமியிடம் அதிமுக பிரமுகர் அத்துமீறல்
சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் உள்ள 30 நிறுவனங்களில் , 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
நேருவின் பெயரை, இரண்டாவது பெயராகப் பயன்படுத்த, என்ன வெட்கம்? மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சியைக் கலைத்ததும் காங்கிரஸ் கட்சிதான் - மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி
மாநிலங்களவையில் திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி
கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரின் ஆட்சிகள் காங்கிரஸ் கட்சியால் கலைக்கப்பட்டன. ஆட்சியைக் கலைத்த காங்கிரஸுடன் கூட்டணியா? : திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி
பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின்
ஐம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகப்புப்படையினர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்புயிள்ளார்.
கோவையில் கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக பொது நல மனு தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் கிருஷ்ணம்பாளையம் அருகே தனியார் மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாகக் குற்றச்சாட்டு. தனியார் திருமண மண்டபத்துக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன் சீல் வைத்தார்.
ஆந்திரா, காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாகத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணாசாலை கட்டிடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகள் விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் டெண்டர் கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு செய்து டிட்கோ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜபாளையம் அருகே சொக்கநாதபுத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலி. இருவர் காயம்
துருக்கியில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சிரியாவில் மட்டும் 2,992 பேரும் பிற பகுதிகளில் 12, 931 பேரும் என மொத்தம் 15, 383 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளீயாகியுள்ளது.
பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிஸ்னி சி.இ.ஓ வாக பாப் இகர் பதவியேற்றபின், எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவாகும்.
இலங்கையில் 13வது சட்ட திருத்தம் தமிழக மீனவர்கள் நலன் குறித்து பேசவும், பிடிபட்ட படகுகளை மீட்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர்
அண்ணாமலை இன்று மதியம் 12.30 மணியளவில் இளங்கைக்கு செல்கின்றனர்.
கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 4,345 குழந்தைகள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பை உறுதி செய்து 23 வயது வரை நிதியுதவி, கல்வி வழங்கப்படும்.
திருநெல்வேலி, களக்காட்டில் அரை கிலோ எடையுள்ள 75 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரக்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. களக்காடு மஞ்சிவிளையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.
குட்கா தடை நீக்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோடி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீட்புக்குழு, மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய இந்திய நாட்டுக்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது. இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த உற்ற நண்பன் என இந்தியாவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
துருக்கி சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11700ஆக உயர்வு. இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட இந்தியர்களிடமிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
வேலூர், லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் விஸ்வநாதன் உள்பட 12 போலீசார் கூண்டோடு மாற்றம். குற்றங்களை சரிவர கட்டுப்படுத்தவில்லை எனக் கூறி எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை.
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 264வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 264வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -