Breaking News LIVE : எத்தனை முறை நீங்களும் அதானியும், வெளிநாட்டுக்கு ஒன்றாக பயணித்தீர்கள்? - பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ஆர்த்தி Last Updated: 07 Feb 2023 07:55 PM
Girl Gets Seizures After Smelling Mehendi: கோன் மருதாணியை கையில் வைத்து முகர்ந்த 9- வயது சிறுமிக்கு வலிப்பு.. தெரிவித்த டெல்லி மருத்துவமனை

Girl Gets Seizures After Smelling Mehendi: கோன் மருதாணியை கையில் வைத்து முகர்ந்த 9- வயது சிறுமிக்கு வலிப்பு.. தெரிவித்த டெல்லி மருத்துவமனை

Rahul Gandhi To PM Modi : 2014-க்கு பிறகு மாயாஜாலம் நிகழ்ந்தது, பணக்காரர்களின் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்து 2-ஆம் இடத்துக்குப் பெயர்ந்தார் அதானி - ராகுல் காந்தி

 2014-க்கு பிறகு மாயாஜாலம் நிகழ்ந்தது, பணக்காரர்களின் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்து 2-ஆம் இடத்துக்குப் பெயர்ந்தார் அதானி - ராகுல் காந்தி

தேர்தல் பத்திரத்தின் வழியாக, பாஜகவுக்கு அதானி அளித்திருக்கும் தொகை எவ்வளவு? பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி..

தேர்தல் பத்திரத்தின் வழியாக, பாஜகவுக்கு அதானி அளித்திருக்கும் தொகை எவ்வளவு? பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி..

உங்கள் வெளிநாட்டுப் பயணத்துக்குப் பின், எத்தனை முறை அதானி அதே நாட்டுக்குச் சென்று வணிக ஒப்பந்தத்தை பெற்றார்? - பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

உங்கள் வெளிநாட்டுப் பயணத்துக்குப் பின், எத்தனை முறை அதானி அதே நாட்டுக்குச் சென்று வணிக ஒப்பந்தத்தை பெற்றார்? - பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

உங்கள் வெளிநாட்டு பயணங்களில், எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்தார்? பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

உங்கள் வெளிநாட்டு பயணங்களில், எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்தார்? பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

Rahul Gandhi Questions PM Modi : பிரதமர் ராகுல் காந்தி கேட்ட முதல் கேள்வி..

Rahul Gandhi Questions PM Modi : பிரதமர் ராகுல் காந்தி கேட்ட முதல் கேள்வி..


1. எத்தனை முறை நீங்களும் அதானியும், வெளிநாட்டுக்கு ஒன்றாக பயணித்தீர்கள்? - பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

Bilkis Bano Supreme Court : வழக்கு விரைவில் விசாரணைப் பட்டியலில் வரும் : பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

வழக்கு விரைவில் விசாரணைப் பட்டியலில் வரும் : பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?


பில்கிஸ் பானு வழக்கில், புதிய அமர்வு விரைவில் உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் ஆகஸ்ட் 15, 2022-ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு 

சிரியாவுக்கு இந்தியா மருந்துப் பொருள் உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருந்துப் பொருட்களை அனுப்புகிறது இந்தியா

நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 

வழக்கறிஞர் விக்டோரியா கெளரியை  சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று விக்டோரியா கெளரி நியமனத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்.


சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியவரை நீதிபதியாக்க கூடாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று, நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.ரன். ரவி குறித்து பேசிய எம்.பி கனிமொழி

தமிழக ஆளுநர் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது குற்றம். மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர் : கனிமொழி

மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு 

முன்னதாக பாஜக உறுப்பினர் ஜோஷி, பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைக்கிறது. உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல் எனவும் கனிமொழி எம்.பி பேச்சு

பிப்ரவரி 10 ஆம் தேதி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரும் 10 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்; அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது

வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படவுள்ளது

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி.பேச்சு

தனது ஒற்றுமை பயணத்தின் போது பெண்கள், குழந்தைகள், முதியவர்களிடம் பேசினேன் : ராகுல் காந்தி

விக்கிப்பீடியா மீதான தடையை திரும்பப்பெற்ற பாகிஸ்தான்

கடவுள் குறித்து அவமதிக்கும் கருத்துகள் இடம்பெற்றதாக கூறி, பாகிஸ்தானில் விக்கிப்பீடியா முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது திரும்பப்பெற்றுள்ளது.

கிழக்கு துருக்கியில் ஐந்தாவது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில், 5.4-ஆக பதிவாகியுள்ளது

கிழக்கு துருக்கியில் ஐந்தாவது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில், 5.4-ஆக பதிவாகியுள்ளது

TNUHDB - HDFC CSR Fund to students : தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு ரூ.39.20 இலட்சம் கல்வி உதவித்தொகை

TNUHDB - HDFC CSR Fund to students : தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு ரூ.39.20 இலட்சம் கல்வி உதவித்தொகை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்

Turkey Earthquake : துருக்கி நிலநடுக்கம்: நிவாரண உதவியாக 6 மில்லியன் டாலர்களை வழங்குகிறது அமெரிக்கா

Turkey Earthquake : ஆக்ராவை மையமாக கொண்ட ராணுவ மருத்துவமனை, 89 பேர் கொண்ட மருத்துவக் குழுவுடன், துருக்கி விரைகிறது

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு..

துருக்கி நிலநடுக்கம்...உதவிக்கரம் நீட்டும் இந்தியா..!



நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.






 

மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு 

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு 

விக்டோரியா கௌரி பதிவியேற்றார்

விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்

விக்டோரியா கௌரி குறித்த வழக்கு விசாரணை தொடங்கியது

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக் குறைவால் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை தயாரித்தவர் ஹேம் நாக் பாபுஜி.

விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு - விசாரணை தொடங்கியது..

காலை 10.35 மணிக்கு விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. 


இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது. 

Turkey : நிலநடுக்கத்தால் பேரிழப்பு : 7 நாட்கள் வேதனையை அனுசரிக்கிறது துருக்கி

துருக்கி - சிரியா நிலநடுக்கம் : இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கி - சிரியா நிலநடுக்கம் : இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு





Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 262வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 262வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (பிப்ரவரி.07) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.