Breaking News LIVE : அடுத்தடுத்த 3 நிலநடுக்கங்கள்; அச்சத்தில் துருக்கி சிரியா; 1800 பேர் பரிதாபமாக பலி..!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் 22% சதவித ஈரப்பதம் உள்ள நெல் பயிர்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு விரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறது.
துருக்கி சிரியா நாடுகளில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 1,800 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை எனக் காரணம் சொல்லி பணி செய்ய மறுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுருத்தியுள்ளது.
சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளாது. மேலும் இது குறித்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் மீட்புப் பணிகளைச் செய்ய இந்திய அரசு 100 பேர் கொண்ட இரண்டு மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்ட்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது.
அதானி விவகாரம் : மீண்டும் அமளி.. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அதிகாலையில் நடந்த துயரம்.. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..மீட்பு பணிகள் தீவிரம்.. 500-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு..
ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றதற்கு, பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு நன்றி தெரிவித்துள்ளார்
Erode East By Election : ஈரோடு கிழக்கு - ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் பிரியாவிற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் உதவியை அறிவித்தார் முதலமைச்சர் . தாம்பரம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயாருக்கு 10 லட்சம் நிதி உதவி
பயிர் சேதம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பு : அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதற்கு பின் ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்
Online Rummy : மதுரை: அண்ணா நகர்ப்பகுதியில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த 26 வயது இளைஞர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
அதானி விவகாரம் : மக்களவை முடங்கியது
அதானி விவகாரத்தை விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிவந்த நிலையில், மக்களவை பிற்பகல் 2 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. ரவிசந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.86 கோடியாக உயர்வு
புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின்
செங்கல்பட்டு: புதிதாக கட்டப்படவுள்ள அரசினர் பாதுகாப்பு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆசிய கோப்பை தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, இந்தியா வராவிட்டால் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் புதிதாய் நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்பு
புதிதாய் நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
5 மாதங்களாக இந்திய அணியில் விளையாட முடியவில்லை. மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
Nellai Theft: நெல்லை மேலப்பாளையத்தில் வக்கீல் வீட்டில் 67 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை
Adani : அதானி குழும பங்குகள், தொடர்ச்சியாக 8-வது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது
அதிகாலையில் நடந்த துயரம்.. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..மீட்பு பணிகள் தீவிரம்.. காலை 10 மணி நிலவரப்படி 53 பேர் உயிரிழப்பு..
Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
கர்நாடக இசையமைப்பாளர் ரிக்கி கேஜுக்கு, அவரது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
Background
தமிழ்நாட்டில் தொடர்ந்து 261வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 261வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி.06) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -