Breaking News LIVE: பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 04 Feb 2023 02:25 PM
பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். 

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாது - அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாது என்று அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் - அண்ணாமலை

அ.தி.மு.க.வின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து

இன்று காலை எம் ஆர் நகர் அழகேசன் தெருவில் உள்ள வங்கியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. யுபிஎஸ் கருவியில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியது.


வங்கியில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் காவலாளி உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்துள்ளனர்.


 

Breaking News LIVE: கோயில்கள் பராமரிப்புக்கு ரூ. 3 கோடி மானியம்

88 கோயில்களில் நிர்வாகம், பராமரிப்பு செலவுகளுக்காக இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு மானியமாக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

வடலூரில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியுள்ளது.

கோயம்பேட்டில் 8 ஏக்கரில் பூங்கா..!

கோயம்பேடு மார்கெட் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 


 

புதுச்சேரி: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம்

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது  கட்டாயம் என, ரங்கசாமி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

Breaking News LIVE: கடும் பனிமூட்டம் காரணமாக 9 ரயில்கள் தாமதம்

கடும் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லியிலிருந்து புறப்பட்ட 9 தொலைதூர பயணிகள் ரயில்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன. 2.30 மணி நேரம் தாமதமாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களைச் சென்றடைந்தன.

முருகேசன் உள்பட 6 பேர் கொலைவழக்கு..!

1996ஆம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முருகேஷன் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள், 13 பேரின் விடுதலைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சட்டக் கல்லூரி மாணவன் தற்கொலை..!

சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் முதலாமாண்டு மாணவன் சஞ்சய் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கனம்ழை காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 259வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 259வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (பிப்ரவரி.04) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.